வரலாறு என்றால் என்ன?
நாம் வரலாற்றை எவ்வாறு கற்பது?
முற்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் அக்காலத்தில் பாவிக்கப்பட்டப் பொருட்கள் மூலம் வரலாற்றை அறிந்து கொள்கிறோம்.மேலும் எமது முதாதையர்கள் கூறும் கதைகள் மூலமும் வரலாற்றினை தெரிந்துக் கொள்கிறோம்.
வரலாற்றை கீழ்வரும் இரண்டு முறைகளில்,கற்றுக் கொள்ளலாம்.
1. இலக்கிய மூலாதாரம்
2.தொல்பொருள் மூலாதாரம்
என்பவைகள் மூலம் இலகுவாக கற்றுக் கொள்ளலாம்.
1.இலக்கிய மூலாதாரம்
எழுத்து வடிவில் காணப்படும் ஆதாரங்கள் ஆகும்
உதாரணமாக, ..... கர்ண பரம்பரை கதைகள்,
பஞ்சபுராணம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2. தொல்பொருள் மூலாதாரம்
புராதன காலத்தில் பாவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அக்காலத்தில் பாவிக்கப்பட்டப் பொருட்களில் எஞ்சியிருப்பவை மூலம் வரலாற்றை அறிந்து கொள்கிறோம்.
உதாரணமாக.....பழைய கட்டிடங்கள்
நாம் வரலாற்றைக் கற்பது பயன்கள்
முற்காலத்தில் முடிவுற்றிருப்பவை தற்போது முடிவுற்றிருப்பதனால் அவற்றைப்பற்றி கற்பதில் பயன் உள்ளதா? என நீங்கள் எண்ணலாம்.எனினும் முற்காலத்தில் நடந்து முடிந்தவை பற்றி கற்பதன் மூலம், நிகழ்காலத்திற்கு தேவையான படிப்பினையைப் பெற்றுக் கொள்ள முடியும். வரலாற்றின் மூலம்,
1.தான் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.
2.இறந்தகால அனுபவம் மூலம் நிகழ்காலத்தை புரியவும், எதிர்காலத்தை சிறப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
3.நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.
4.மனித தன்மையை மதிப்பதில் தேசிய ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
5.மாற்றுக் கலாச்சாரத்தை மதித்தல்.
6.வேற்றுக் கருத்துக்களை சகித்துக் கொள்ளல்.
போன்றவற்றை பயன்களாக குறிப்பிட முடியும். எனவே, வரலாறு மனிதனோடு கால காலமாக வாழ்ந்து வரும் தகவல் களஞ்சியமாகும். வரலாறு நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் மறைந்துக் காணப்படுகிறது.அதாவது சிற்ப்பிக்குள் முத்து போல. அம்முத்துக்களைத் தேடிப் பயன் பெறுவது எமது கடமை ஆகும். எனவே வரலாற்றை அறிந்து பற்பல படிப்பினைகளை பெற்று எம் வாழ்க்கையை நல்வாழ்க்கையாக அமைத்துக் கொள்வோம்.
_ வணக்கம் _ ● K.MAHARAMS






Comments
Post a Comment
Welcome to noob blog